• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 15, 2024

யாரையும் அற்பமாக
நினைத்து விடாதீர்கள்..
சிறிய தீக்குச்சியின் வலிமை தான்
பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..!

தேவையற்ற எண்ணங்களை
நீ சுமக்கும் வரை உன் வாழ்வில்
நிம்மதி என்பது சாத்தியம்
இல்லாததாகவே இருக்கும்..!

வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்க
கற்றுக் கொள்.. நிம்மதியும்
நிறைவும் நிலைக்கும்..!

எல்லாவற்றையும் எல்லாரிடமும்
சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்கு
காதுகள் இருக்கும் புரிந்து
கொள்வதற்கு மனங்கள் இருக்காது..!

எதுவாக இருந்தாலும் அது
இருக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்
போன பிறகு அதை எண்ணி வருந்தாதே..!

ஒருவர் யார் என்பதை
புரிந்து கொண்ட பிறகு.. அவரோடு
பழகுவது என்பது இயலாத ஒன்று..
முதலில் பழகு காலப்போக்கில்
அவரே அவரை வெளிப்படுத்துவார்..!