• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 1, 2023

பொன்மொழி

1. மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.

2. மனம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.

3. மனதில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால் பகையுணர்வு நீங்கும்.

4. கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.

5. பிரச்சனை குறுக்கிடும் போது, மனம் தளர்வது கூடாது. நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.

6. மனிதனின் வெற்றி, மதிப்பு எல்லாம் அவனுடைய மனதைப் பொறுத்தே அமைகிறது.

7. மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

8. உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.

9. வாங்கும் கடனும், தேங்கும் பணமும் ஒருவரிடமே வளரக் கூடாது. இல்லாவிட்டால் மனநிம்மதி குறையும்.

10. மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.