• Fri. Jan 17th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Nov 25, 2023

சிந்தனை துளிகள்

1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம்.

2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.

3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.

4. வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.

5. பொய்க் கல்வி பெருமை பேசும். மெய்க்கல்வி தாழ்த்தி சொல்லும்.

6. மருந்து சிலசமயங்களில் பலனளிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் விஷமோ ஒருப்போதும் விளைவு தராமல் போகாது.

7. நன்றாக எழுதுவதைப் போன்றது சத்தியம். அது பழக பழகத்தான் சரியாக வரும்.

8. வேலை செய்யாவிட்டால் நாட்களும் புனிதமாகது, வாழ்க்கையும் புனிதமாகது.

9. வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையில் நீ நண்பர்களை அறிவாய்.

10. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே.