• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா..,

ByPrabhu Sekar

Mar 5, 2026

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான டாக்டர் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா, பள்ளியின் தமிழ்நாடு மாநில செயற்பாட்டு தலைவர் ஹரிபாபு தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த கபடி பயிற்ச்சியாளர் ஜெயராஜ் கலந்து கொண்டு தேசியகொடியேற்றியும், விளையாட்டு போட்டியின் கொடி மற்றும் விளையாட்டு ஜோதி ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். போட்டியில் தமிழகத்தில் உள்ள உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. விளையாட்டு விழாவில் கால்பந்து, த்ரோபால், வாலிபால், கோகோ, கால்பந்து என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

விளையாட்டு விழாவில் மண்டல போட்டி, மாநில போட்டியில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவிலான சைத்தன்யா பள்ளி மாணவர்களுடன் போட்டியிடுவார்கள் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும், சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டது. முன்னதாக சிலம்ப வீரர்களின் வீரசாகச நிகழ்ச்சி நடைபெற்று அனைவரயும் மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியின் முதல்வர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

பள்ளியின் இயக்குநர் சீமாபுப்பனா மாணவர்களுக்கு வாழ்த்துகைளை தெரிவித்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளியின் முதல்வர் , பி.எஸ் ராவ் நினைவு விளையாட்டு விழாவில் தமிழகத்தில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளி மாணவ, மாணவிகள் மண்டல போட்டி, மாநில போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் எனவும் எங்கள் பள்ளியின் தலைவர் பி.எஸ்.ராவ் அவர்களின் கனவு கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் மாணவர்களை நன்கு மேன்படுத்தபடும் என்பதே.
அவருடைய கனவை அனைத்து மாணவர்களும் , நிறைவேற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.