• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்

ByKalamegam Viswanathan

May 29, 2023

ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் இடம் பிடித்தனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில்மதுரை சிலம்பம் அகடமி சார்பில் கண்களைக் கட்டிக் கொண்டு ஆறு மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆஸ்கர் உலக சாதனை மலருக்காள சிலம்ப மாணவர்கள் 7 பெண்குழந்தைகள் உள்பட 16 பேர் கண்களை கட்டி 6 மணிநேரம் சிலம்பம் சுற்றம் போட்டி நடைபெற்றது.இதற்காக 3 மாதம் பயிற்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று காலை 6 மணிக்கு கண்களை கட்டி போட்டிக்கு தயாராகினர். இதில் பங்குபெற்ற மாணவர்கள் காலை 6 மணிக்கு பயிற்சி துவங்கியது பகல் 12 மணிவரை நடைபெற்றது.பயிற்ச்சியின் போது மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் போது கூட ஒரு கையில் சிலம்பம் சுழற்றி ஒரு கையில் தண்ணீர் குடித்து போட்டியில் பங்கேற்றனர்.பயிற்ச்சி முடிவின்போது மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் அணிவித்து வாழ்து தெரிவித்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்