• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ராஜபாளையம் நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம்

ByKalamegam Viswanathan

Feb 12, 2024

ராஜபாளையம் நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது. 121 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 32 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நகர் மன்ற கூட்டத்தில் 1, 12, 15 , 31,32 , ஆகிய வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சுகாதாரம், சாலை, தண்ணீர்,வசதி இதுவரை செய்து தரவில்லை என கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு நகர் மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளில் சாலை வசதி சுகாதார வசதி மின்விளக்கு வசதி போன்ற வசதிகள் கூடிய விரைவில் செய்து தரப்படும் என கூறினர். மேலும், கூட்டத்தில் 121 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.