கோடை காலம், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர், பொதுத்தேர்வு போன்வற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இனிவாரும் நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. அத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெற உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.








