• Fri. Jan 24th, 2025

ரேஷன் கடைகளில் பொருட்களை ஒரே தவணையில் வழங்க உத்தரவு

Byவிஷா

Mar 7, 2024

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடை மூலமாக இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெயில் காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக்கூடாது என்பதற்காக, மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.