• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஓபிஎஸ் – யின் ஆதரவாளர்கள் திமுக இணைப்பு விழா..,

BySubeshchandrabose

Mar 7, 2026

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மதுரையில் நடைபெறும் கூட்டத்திற்கு இன்று புறப்பட்டனர்.

அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அதிமுகவில் அவருக்கான கதவுகள் மூடப்பட்டது.

தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வந்த ஓபிஎஸ் திடீரென தனது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் தனது மகன் ஒ.பி ரவீந்திரநாத் உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே பல்வேறு அதிருப்திகள் எழுந்தது மூன்று முறை முதலமைச்சராக வாய்ப்பு கொடுத்த அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றதை ஏற்றுக் கொள்ளாத ஓபிஎஸ் இன் ஆதரவாளர்கள் இன்று நடைபெறும் திமுக இணைப்பு விழா கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ள 500க்கும் மேற்பட்டோர் அதிமுக மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் சேலம் சென்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கட்சியில் இணைவதற்காக புறப்பட்டு சென்றனர்.

இதில் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவருமான செல்லமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சேலம் நோக்கி புறப்பட்டனர்

இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டி மாபெரும் இணைப்பு விழா கூட்டத்தை இன்று மாலை நடத்துகிறார்

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரை நோக்கி சென்றனர்

முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களான கடமலை – மயிலை தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த கிளைச் செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்

தொடர்ந்து ஓ பன்னீர்செல் ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதால் தேனியில் இணைப்பு விழா கூட்டத்தை நடத்தாமல் மதுரையில் நடத்துவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.