• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் வழக்கு விசாரணை தொடங்கியது

ByA.Tamilselvan

Jul 7, 2022

வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கு விராசணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது.
அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார். அதன்படி, ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது. வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.