• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு

சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….
குப்பை உரகிடங்கு அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கும் என பொதுமக்கள் குற்றச்சாட்டு…சேலம் மாநகராட்சி 4 வது வார்டு நகரமலை அடிவாரம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி மக்களின் பிரதான தொழிலான விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகாரமாகும் குப்பைகளை வைத்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மாநகரப் பகுதிகளில் கிடங்குகள் அமைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 4 வது வார்டு நகரமலை அடிவாரம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் குடியிருந்து விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம் இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி எங்கள் பகுதியில் உரம் தயாரிக்கும் கிடங்கு அமைத்தால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கும் எனவும் கூறினர்.மேலும் இந்தப் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது சுமார் 3500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர் அந்த குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்