புதுச்சேரியில் சமீப காலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வெளி மாநில நிறுவனங்கள் நவீன முறையில் குளு குளு வசதியுடன் சலூன் நிறுவனங்களை அமைத்து முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர்.

இதனால் புதுச்சேரி காரைக்காலில் உள்ள சிறிய சலூன் கடை மற்றும் பாரம்பரியமாக முடி திருத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் 49 ரூபாய்க்கு ஷேவிங் 99 ரூபாய்க்கு ஹேர் கட்டிங் என்ற விளம்பர பலகைகளை சாலையில் வைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் செய்து வருகின்றனர்.
இதற்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலச் சார்ந்த சிகை அலங்கார நிலைய நல சங்கத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது போன்ற கட்டண விளம்பர பலகைகளை வெளியில் வைப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கட்டண பலகைகளை வெளியில் வைத்து தொழில் செய்ய வேண்டாம் என வலியுறுத்தி அனைத்து நவீன கார்ப்பரேட் சலூனுக்கு சென்ற அவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது…
கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிதிருத்தும் தொழில் செய்ய தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதே நேரத்தில் கட்டண விபரங்களை சாலையில் விளம்பரப் பலகையாக வைத்து தொழில் வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர்கள் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.எனவே கட்டண பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.