• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோயிலுக்கென துவக்கப்பட்ட புதிய காவல் நிலையம் திறப்பு..,

ByKalamegam Viswanathan

Apr 17, 2025

சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அரசால் அறிவிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டனர். இது தற்காலிகமாக கோயிலுக்கு முன்புள்ள புறக்காவல் நிலையத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது பெரியரத வீதி தனியார் மண்டபத்தில் கோயில் காவல் நிலையம் செயல்பட முடிவு செய்யப்பட்டு நேற்று காலை சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர்.

மதுரை தெற்கு காவல் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் திறந்து வைத்தார். திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் சசிப்பிரியா, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள், மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா, இன்ஸ்பெக்டர்கள், ராஜதுரை, மதுரைவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.