• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு..,

ByKalamegam Viswanathan

Oct 30, 2023

கோவை 100 அடி சாலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய ரகங்களை பிரபல நடிகர் பிரபு மற்றும் பிரபல நடிகை ரெஜினா ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரபு,
நாங்கள் பிளைட்டில் கரெக்டா ஏறினோம். ஆனால் பிலைட் தாமதம் ஆகி உள்ளது. இந்த ஜுவல்லரி நான் லேட்டாக வந்ததற்காக மன்னிப்பு. கல்யாண் ஜுவல்லரி ஆரம்பித்தது கோவையில் தான் இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேர்மையான வர்த்தகம். இதற்கு முக்கிய காரணம் அனைவரும் குடும்பத்தாராக பழகுவார்கள். கல்யாண் ஜுவல்லரி எங்களுடைய குடும்பத்தார். அவர்களுடன் நான் பயணம் செய்து வருகிறேன். கல்யாண் ஜுவல்லரி வளர்ந்ததற்கு பொது மக்கள் தான் காரணம். ஜம்மு, காஷ்மீர் கூட கடையை ஆரம்பித்துள்ளார்கள் ரெஜினா கல்யாண உடைய குடும்பத்தார்
ரெஜினா பேசும் போது, புதிதாக புதிய ரகங்கள் இங்கு வைக்கப்படுகிறது. அதனை பொதுமக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
அதன் பிறகு பிரபு கோவை எங்களுடைய சம்மந்தி ஊர், எங்களுடைய அய்யாவிற்கு கோவை மக்கள் அதிகமான நண்பர்கள் கவுண்டர் நாயக்கர் அனைவரும் அப்பாவிற்கு மிக நெருங்கியவர்கள். பொள்ளாச்சியில் எங்களுடைய நிலமும் உள்ளது. பையன் வேட்டைக்காரன் புதூர் மகளை கல்யாணம் செய்துள்ளார். கோவை அனைத்து பகுதிகளிலும் வேண்டியவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சாப்பாட்டுக்கேரியர் எனக்கு கொடுப்பார்கள். விருந்தோம்பல் என்றால் கோவை தான் மறக்க முடியாத அனுபவம் பொள்ளாச்சி என்னுடைய லக்கி ஊர் சின்னத்தம்பி, பெரியதம்பி சிறுவாணி பகுதி இருந்து ஆனைமலை சிறுவாணி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சூட்டிங் செய்துள்ளோம். எந்த வீட்டுக்கு சென்றாலும் ஐயாவுடைய போட்டோ இருக்கும் ஐயாவிற்கு ரொம்ப பிரியமானவர்களா இருந்தார்கள் லோகேஷ் கனகராஜ் மாதிரி இருந்தால் படம் செய்வோம். பழைய கதைகள் புதிய முறையில் வருகிறது. தமிழ் டெக்னீசியன் பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆந்திராவில் பேசுகிறார்கள், கன்னடா பேசுகிறார்கள், கேரளாவில் பேசுகிறார்கள் அருமையான டெக்னீசியன் திரைப்படத்துறையில் உள்ளார்கள். குரு சிஷ்யன் 2 விக்ரம் பிரபு கார்த்திக் பையனும் செய்தால் சந்தோஷ என்ன கொடுமை சரவணா முடிந்தவரை ட்ரை செய்து உள்ளார்கள். என் நண்பர் வாசு அவர் டைரக்ட் செய்துள்ளார் அவர் எது செய்தாலும் நன்றாக இருக்கும்.