நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மைய விளையாட்டு மைதானம் ரூபாய் 6.52கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். இந்த மையத்தின் விளையாட்டு மைதானம் ரூபாய் 6.52கோடி செலவில் புனரமைக்கப்பட்டது. இதில் ஓட்டப்பந்தயத்திற்கான எட்டு ஓட்டப்பந்தய பாதை நவீன முறையில் ரப்பர் பொடிகளை வைத்து தனியார் நிறுவனம் மூலம் பணிகள் நிறைவடைந்த பின் இன்று லெப்டினன்ட் ஜெனரல் கே எஸ் பிரார் சென்னையில் இருந்து வந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்கு பயிற்சி பெறும் மாணவர்களை சந்தித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் எம். ஆர். சி கமாண்டர் கிருஷ் நேந்து தாஸ் மற்றும் கூடுதல் கமாண்டன்ட் நித்தின் குட்டப்பா மற்றும் மேஜர் சச்சின் சிங் குந்தல் மேஜர் முத்துக்குமார் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ராணுவ மையத்தில் பயிற்சியில் உள்ள 30 பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து வருவதாகவும் நாளடைவில் ராணுவ விளையாட்டு வீரர்களாக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும், இந்த வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் பயிற்சில் சேரலாம் என்றும் லெப்டினலட் ஜெனரல் கே. எஸ். பிரார் தெரிவித்தார்.