• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வ உ சிதம்பரம் பிள்ளை கலையரங்கு திறப்பு விழா..,

ByRadhakrishnan Thangaraj

Oct 27, 2025

வ உ சிதம்பரம் பிள்ளை கலையரங்கு திறப்பு விழா வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ரிப்பன் வெட்டி திறத்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்து செம்மல் வ.உ சிதம்பரம் பிள்ளை பெயரில் கலையரங்கம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது இந்த கலையரங்க திறப்பு விழாவிற்கு வேளாளர் உறவின்முறை தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். .வெள்ளாளர் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் புதியராஜ் முன்னிலை வைத்தார். வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன் புதிய நீதி கட்சி தென் மண்டல செயலாளர் வெங்கடாசலம் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா . இல்லத்துப் பிள்ளைமார் சங்க மாநிலத் தலைவர் டால்பின் முருகதாஸ் ஆகியோர் ரிப்பன் வெட்டி கலையரங்கத்தை திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளை படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன் பேசும்பொழுது நமது சமுதாய இளைஞர்கள் கல்வியில் முன்னேறி அரசு துறையில் பணியாற்ற வேண்டும் அதற்கு கல்விக்கு உதவி செய்ய நாங்கள் உறுதுணையாக இருப்போம் என கூறினார் .

இதை தொடர்ந்து பேசிய வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா பேசும் பொழுது வருகின்ற 2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அதிக சீட் வழங்கும் கட்சிக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.