மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் முடிவுற்ற திட்ட பணிகளுக்கான திறப்பு விழா நடைபெற்றது.

அந்த வகையில் சிறுவாலை ஊராட்சி செல்லனகவுண்டன்பட்டியில் ரூ13.56 லட்சம் மதிப்பீட்டிலும் வைரவநத்தம், வயலூர் மற்றும் விட்டங்குளம் ஊராட்சிகளில் தலா ரூ9.97 லட்சம் மதிப்பிட்டிலும் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிட்டங்கி,வைரவநத்தம் ஊராட்சியில் ரூ16.50 லட்சம் மதிப்பிட்டில் கட்டபட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
இதில் ஊராட்சி துறை உதவி இயக்குனர் அரவிந்த் கூட்டுறவு துறை இணை பதிவாளர் சதிஷ்குமார், மதுரை வடக்கு வட்ட குடிமை பொருள் வட்டாட்சியர், மதுரை மேற்கு குடிமை பொருள் கூட்டுறவு சார்பதிவாளர் தினேஷ்குமார், சிறுவாலை கூட்டுறவு செயலாளர் சண்முகம் மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, பொற்செல்வி வாடிபட்டி வட்டாட்சியர் ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)