• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடி.. காத்துக்கொள்ள இதோ சிம்பிள் வழி..

Byகாயத்ரி

Apr 27, 2022

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்கின்றனர். இந்த ஆன்லைன் பணப் வரிவர்த்தனைகள் மூலமாக தற்போது பல மோசடிகள் நடக்கிறது. இந்நிலையில் க்யூ ஆர் கோடு மூலம் தற்போது பல மோசடிகள் நடப்பதாக காவல்துறையில் வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் மோசடி கும்பலை பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் OLX என்ற பிரபலமான நிறுவனங்களின் பெயரில் தற்போது மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனவே க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிபதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

• உங்களுக்கு தெரியாத நபர்களுடன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
• ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகள் சிறந்ததாக இருப்பினும், அதில் நீங்கள் கவனமாக இருந்தால் மட்டுமே மோசடி கும்பலில் இருந்து உங்களுடைய பணத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
• நீங்கள் UPI பயன்படுத்தும்போது அதில் ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்த வேண்டும். BHIM, போன் பே, கூகுள் பே உள்ளிட்ட அனைத்து UPI கட்டண வழிகளும் ஒரு பாதுகாப்பு குறியீட்டு எண்ணை அனுமதிக்கிறது. இதை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் பாதுகாப்பு குறியீட்டு எண் கேட்கப்படும்.
• நீங்கள் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முதலில் நீங்கள் பணம் பெறும் அல்லது அனுப்பும் நபர் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
• பிரபல OLX நிறுவனத்தில் பொருள்கள் விற்கும் போதோ அல்லது வாங்கும் போதோ அவர்களின் முழு விபரங்களையும் சரி பார்க்க வேண்டும்.
• OTP எண்களை எப்பொழுதும் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி அல்லாத நபர்களிடமிருந்து கியூஆர் கோடு வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
• உங்களுடைய UPI அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.