• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் சூதாட்டம்… தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

Byகாயத்ரி

Sep 27, 2022

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின்படியும் பொதுமக்களிடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய அவசர சட்டம் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.