மதுரை மாநகர் அண்ணாபேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிமுருகன் என்ற மினிபஸ் ஆரப்பாளையம் நோக்கி சென்றுள்ளது.

அப்போது ஓபுளாபடித்துறை பகுதியிலுள்ள வைகையாற்று பாலத்தில் செல்ல வளைந்தபோது முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த மதுரை மாவட்டம் பரவை அருகேயுள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியை சேர்ந்த பாண்டி (55) தலையில் படுகாயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவரது மனைவி செந்தாமரைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து பாண்டியை மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துசென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்கு கொண்டுசெல்லப்பட்டது.
காயமடைந்த பாண்டியின் மனைவி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
இந்த விபத்துக்குள்ளான பேருந்து ஏற்கனவே ஒரு முறை விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது மதுரை மாநகர் பகுதிகளில் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் மினிபஸ்கள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை. எழுந்துள்ளது.













; ?>)
; ?>)
; ?>)