விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை அருகே அமைந்துள்ள சுரன் நர்சிங் கல்லூரியில் கல்லூரி சேர்மன் குவைத் ராஜா ஏற்பாட்டில் அங்கு பயிலக்கூடிய கேரளா மாநில செவிலியர் மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக அத்தப்பூ கோலம் போட்டு, மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள பாரம்பரிய சேலை கட்டி நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

கல்லூரியில் பயிலக்கூடிய தமிழ் மாணவிகளும் ஓணம் பண்டிகை கொண்டாடும் விதவிதமாக கேரள மாநில பாரம்பரிய சேலை கட்டி கேரளா மாநில மாணவிகளுடன் இணைந்து நடனமாடி உறியடித்து, பாட்டு பாடி நடனமாடி, கொண்டாடினர்.