தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவையில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் பொது செயலாளர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், கேரளா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் ரவீந்தர்நாத் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக பிரபல நடிகை ரோகினி,முன்னாள் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,ஆர்ய வைத்திய பார்மசி செயல் இயக்குனர் கிருஷ்ணதாஸ் வாரியர்,கோயம்புத்தூர் மலையாளி சமாஜம் தலைவர் ராமச்சந்திரன்,வேர்ல்டு மலையாளி கவுன்சில் தலைவர் பத்மகுமார்,கேரள கிளப் தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னதாக கேரள மாநிலத்தின் கலாச்சார நடனங்கள்,செண்டை மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மேடையில் நடைபெற்றன.
தொடர்ந்து ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஓணம் சத்தியா விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
விழாவில் 2000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மலையாள பண்பாட்டு மேடை பொது செயலாளர் சந்தோஷ் பேசுகையில்,கோவையில் உள்ள கேரள மாநில மக்களின் நலன்களை காக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர்,மூன்றாவது எடிஷனாக மலையாள பண்பாட்டு மேடை இந்த ஓணம் விழா நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார். விழாவில் இறுதியாக பாபுராஜ் நன்றி தெரிவித்தார்.