• Sat. May 4th, 2024

ராகுல்காந்தியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு.., மாபெரும் ரத்ததான முகாம்..!

ByKalamegam Viswanathan

Jun 20, 2023

மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் பேச்சு பொறுப்பெற்றது. மேகதாது அணையோ வேறு எந்தவித நடவடிக்கைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் நிலை வேறு வேராக உள்ளது. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்த விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்..,
அமலாக்க துறையையும், வருமான வரி துறையையும் மத்திய அரசு துஷ்பிரயோகம் செய்கிறது. எதிர்க்கட்சிகளாலும் அனைத்து மாநிலங்களிலும் இது தொடர்கிறது தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு:

விமான நிலைய விரிவாக்கத்திற்கு மூன்று ஏக்கர் நிலம் மட்டும் மாநில அரசால் வழங்கப்பட வேண்டி இருக்கிறது. மீதமுள்ள நிலங்கள் கொடுக்கப்பட்டு விட்டது. அந்த மூன்று ஏக்கர் நிலம் வந்தவுடன் பணிகள் துவங்கும் என்று சொல்லியுள்ளார்கள். மதுரை விமான நிலைய விரிவாக்க பணி தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் ஏற்படுத்துகிறது.
விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது குறித்த கேள்விக்கு:
விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்று அறிவிக்கட்டும் அதன் பிறகு இது பற்றி பேசலாம். மாணவர்களுக்கு தன்னுடைய கருத்துக்களை சொல்லி உள்ளார். கருத்துக்களை சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது அதை பாராட்ட வேண்டும். தைரியமாக கருத்து சொல்வதற்கு முன் வந்ததற்கு பாராட்டுக்கள்.
மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை குறித்த கேள்விக்கு:
மோடி அரசு தமிழக வளர்ச்சியில் மிகப்பெரிய தடைகளை உருவாக்கி வருகிறது. அது எய்ம்சாக இருந்தாலும், மதுரை விமான நிலையமாக இருந்தாலும், கப்பலூர் டோல்கேட் ஆக இருந்தாலும் இந்த ஒன்பது ஆண்டுகளில் தடைகளை உருவாக்குவதை மட்டுமே பணிகளாக செய்கிறது. இந்த அரசின் முடிவு காலம் எப்போது வருகிறதோ அப்போதுதான் மதுரையின் விடிவு காலம் வரும்.
பாஜகவின் திட்டங்கள் தோல்வி குறித்த கேள்விக்கு:

சங்கி அரசுகளின் தொடர் திட்டமாக இருக்கிறது, ஏழை நடுத்தர மக்களின் பணங்களை, ரத்தத்தை உறிஞ்சி அதானிக்கும், அம்பானிக்கும் கொடுப்பதுதான் அவர்களின் மிக முக்கிய பணியாக உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வரப்போகிறது அதற்கு எடுத்துக்காட்டு கர்நாடக தேர்தல் காங்கிரஸ் கட்சி வெற்றி. அனைத்து எதிர்கட்சிகளும் சேர்ந்து அடுத்த பத்து மாதங்களில் ஒரு நல்ல அரசு டெல்லியில் உருவாகும்.
காங்கிரஸ் சார்பாக பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு:
இதுகுறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு செய்யும். என் தனிப்பட்ட விருப்பம் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமராக வரவேண்டும் என்பது என் கோரிக்கை.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் நிலைபாடு குறித்த கேள்விக்கு:
டி.கே.சிவக்குமாரின் பேச்சு பொறுப்பெற்றது. மேகதாது அணையோ வேறு எந்தவித நடவடிக்கைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் நிலை வேறு வேராக உள்ளது. பாஜகவின் நிலையை கர்நாடகா காங்கிரஸ{ம் எடுத்து விடக்கூடாது. டி.கே சிவக்குமார் இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் பெங்களூரின் தண்ணி பிரச்சனை பற்றி பேசுகிறார். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். விவசாயிகளின் வாழ்வும், பெங்களூரில் குடிநீர் பிரச்சனையும் சேர்த்து பேசுவது என்பது சரியாக இருக்காது. டி.கே.சிவகுமார் அரசியல் செய்வதை விட்டுவிட்டு தமிழகத்தில் உள்ள இந்த முக்கிய பிரச்சனையில் எந்தவிதமான வேதனையும் வராமல் பார்த்துக் கொள்வார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
செந்தில் பாலாஜியை போல தமிழக முதல்வரும் கைது செய்யப்படுவார் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு:
அரவக்குறிச்சி மக்கள் அடித்த அடியில் அண்ணாமலையின் மூளை குழம்பி உள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுத்த அண்ணாமலையை மக்கள் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் இரண்டு வருடங்களாக பித்து பிடித்தவர் போல பேசுகிறார் அதில் ஒன்றுதான் இதுவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *