• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு மனவளம் குன்றியவர்களுக்கு அதிமுக தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் அன்னதானம்.

ByG.Suresh

Feb 27, 2024

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் தமிழக முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் MLA தலைமையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அம்மா பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சிவகங்கை அதிமுக தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் புரட்சி தலைவி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை, மானாமதுரை செல்லும் வழியில் சுந்தர நடப்பு கிராமம் அருகே உள்ள கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன்,தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி ,வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.