• Tue. Jun 18th, 2024

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டியில் காவலர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சி

ByP.Thangapandi

Jun 15, 2024

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி காவல் சரகத்தில் பணியாற்றும் 100க்கும் அதிகமான காவலர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

வரும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட உள்ளது., இந்த சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உசிலம்பட்டி காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார், காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா, செக்காணூரணி, எழுமலை, உத்தப்பநாயக்கணூர், வாலாந்தூர், எம்.கல்லுப்பட்டி என 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 100க்கும் அதிகமான காவலர்கள் கலந்து கொண்டு மன அமைதிக்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

மதுரையைச் சேர்ந்த பிரம்மகுமாரிகள் தியான நிலையத்தைச் சேர்ந்த ஆஷா, காவலர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க காவலர்கள் யோகா பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *