• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு..,உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு..!

ByP.Thangapandi

Nov 11, 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்து மல்லிகை 1200 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 1500 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது
தீபாவளி பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது, புத்தாடை, பட்டாசு, சுவீட் வரிசையில் பண்டிகை தினத்தன்று குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்யும் மக்களும் அதிகம் உள்ளன. அந்த வகையில் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களின் விலையும் இந்த பண்டிகையை முன்னிட்டு இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 500 முதல் 700 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 1200 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மெட்ராஸ் மல்லி 1500 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது., இதே போன்று பிச்சி 1000 ரூபாய்க்கும், முல்லை 1200 ரூபாய்க்கும், அரளி, செண்டு பூ, கோழிக் கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது.,
மழைக்காலம் என்பதால் பூக்களின் வரத்தும் குறைந்து காணப்படும் சூழலில் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.,