• Sun. May 12th, 2024

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு.., கோவையில் கூடுதல் நேரம் கடைகள் திறக்க அனுமதி..!

BySeenu

Nov 4, 2023
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கோவை மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிம்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பாதுகாப்பை காவல்துறை வழங்கும் என்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
ஆயுர்வேத மருந்து குறித்த  விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்து செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்..,
தமிழக முதலமைச்சரின் உத்திரவின்படி வாரத்திற்கு ஒருமுறை காவலர்களுக்கு விடுமுறை அளித்து வருவதாகவும், தீபாவளி போன்ற முக்கியமான நேரங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும்  கடைத்தெருக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஒரு சில நாட்களில் மட்டும்  சில மணி நேரம் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை ஈடு செய்யும் வகையில் காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 
மேலும்  கோவை மாநகர  போக்குவரத்து காவர்களுக்காக குளிர்சாதன வசதியுடன் மாடர்ன் நிழற்குடை ஒப்பனக்கார வீதி பகுதியில்  அமைக்கப்பட்டுள்ளதாகவும்  அந்த வசதி மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார். தீபாவளியை முன்னிட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பனக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களும் சட்டம் ஒழுங்கு காவலர்களும் அதிக அளவில் பணியமர்த்தப்பட  இருக்கிறார்கள் எனவும், பிக்பக்கெட் போன்ற குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறிய அவர், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக  இரவில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கடையை திறந்து வைக்க கடை உரிமையாளர்களுக்கு    அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும்  காவல்துறை அதற்கான பாதுகாப்பை வழங்கும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார். 
மேலும் மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு ஓப்பனக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன  முகத்தை துல்லியமாக கண்டறியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் மெட்டா டேட்டா என்ற புதிய தொழில்நுட்பத்துடனான 110 கேமராக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருப்பட்டுள்ளது எனவும் அடுத்த கட்டமாக மேலும் கூடுதலாக 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த கேமராக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார். 
இந்த நவீன கேமராக்கள் குற்றங்களை தடுப்பதற்கும் தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் வசதியாக  இருக்கும் தீபாவளி என்றும்  கூட்டத்தை கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி ஆகிய இடங்களில் உயர் கோபுர கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தீபாவளியை பொருத்தவரை கோவை மாநகரில் உள்ள 3 ஆயிரம் காவலர்களும் பணியில் இருப்பார்கள் என்றும் பிக்பாக்கெட்  குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கடைத்தெருக்கள் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சிறப்பு ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *