தமிழகத்தில் ஓமிக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளுடன கூடிய ஊராடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது! இந்நிலையில், வழிபாட்டு தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்!
அவ்வரிசையில், உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மார்கழி மாதத்தில் மீனாட்சிஅம்மன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு 4.30 மணி முதல் பக்க்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்!
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு முன்னிட்டு அம்மனுக்கு வைர கிரிடமும், தங்க கவசம் சாத்தியும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தியும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது!
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்தும், அனைவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்தபின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்!