73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு தமிழக முதல்வர் விருதினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார்.
இவ்விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர், துணைத்தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகள் காவல்துறையில் கண்ணியத்துடன் நேர்மையாக காவல் புரிந்து பணியாற்றிய காவலர்களை பாராட்டும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியக் குடியரசு தின நன்னாளில் சிறப்பாக கௌரவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தமிழக முதல்வர் விருது வழங்கப்பட்டது.