• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆட்சி மாற்றம் அந்த நாள், ஜனநாயகம் மலரும் – ஆர்.பி.உதயக்குமார்

ByP.Thangapandi

Jan 23, 2025

மதுரை, சிவகங்கை வந்த முதல்வர், அரிட்டாபட்டி விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிப்பதில், திராணி உண்டா என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜீஆர்-ன் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்..,

சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், திமுக அரசின் சாதனைகளை எதிர்கட்சி தலைவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற பச்சை பொய்யை சொல்லி சென்றிருக்கிறார்.

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய ஆளுநர் உரையை இதுநாள் வரை வெளியிடவில்லை. நல்ல ஆண் மகனாக இருந்தால் வெளியிட்டு விட்டு பேச வேண்டும்.,

வாங்கிய கடனை கட்ட வேண்டும் என்றால் இந்த சாமானிய மக்களிடம் தானே வரியை விதிக்க போகிறீர்கள், இதை விடுத்து நாங்களே எங்கள் சொந்த பணத்தில் கடனை கட்டுகிறோம் என்று கடனை கட்டினால் நான் பொது வாழ்க்கையில் இருந்து சென்று விடுகிறேன்.

இரண்டு நாள் மதுரை, சிவகங்கையில் சுற்றினாரே முதல்வர், அருகாமையில் இருக்கும் சிவகங்கையில் மனுவை பெற்ற நீங்கள், பிறந்து வளர்ந்து அகதியாக போய் விடுவோமோ என அஞ்சிக் கொண்டிருக்கும் மேலூர் விவசாயிகளை அழைத்து வாருங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை தருகிறேன். இந்த டங்ஸ்சன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பேன் என சொல்லி இருந்தால் நான் விவசாயிகளின் முதல்வர் என்பது உண்மை.

10 நிமிடத்தில் சந்திக்க கூடிய விவசாயிகளை சந்தித்து நம்பிக்கை ஊட்டி இருக்கலாமே, இந்த மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில், திராணி இருக்கா என சவால் விடுகிறேன்.

நாடாளுமன்றம் டங்ஸ்சன் ஒப்பந்தத்தை கொண்டு வரும் போதே இவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள், ஏன் மௌனமாக இருந்தார் என்றால் கரகாட்டகாரன் பட பாணியில் 10 மாத காலம் என்ன செய்தோமோ அதான் இது என்கிறார்கள்.

அவருக்கு கவலை என்ன என்றால் பெற்ற பிள்ளையையும், பேரனையும் பட்டாபிஷேகம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போட்டுள்ளார்கள். எங்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட முடியாது.

இப்போது மேலூர் மக்கள் எப்படி அகதிகளாக போய்விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளார்களோ, அதே போல தமிழ்நாடு மக்களும் அகதிகளாக போய்விடுவோமோ என அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் எந்த நாள் அந்த நாள், என்று ஜனநாயகம் மலரும் என காத்திருக்கிறார்கள் என பேசினார்.