• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக சுற்றுலாதுறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சுற்றுப்பயணம்…

ByG.Suresh

Aug 8, 2024

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக சுற்றுலாதுறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சுற்றுப்பயணம்… செட்டிநாட்டின் பாரம்பரிய அரண்மனையை கண்டு ரசித்தனர்.

ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் அயல்நாட்டு தமிழர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று ,அங்குள்ள பாரம்பரியத்தையும், இயற்கை அழகையும் ரசித்துச் செல்வது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட அயல் நாட்டு வாழ் தமிழர்கள் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாரம்பரிய புகழ்மிக்க செட்டிநாட்டு அரண்மனைக்கு வருகை தந்தனர்.அவர்கள், அங்கிருந்த கலைநயமிக்க கட்டிட வேலைப்பாடுகள் தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட கதவுகள், ஜன்னல்கள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட குளவிகல், அம்மிக்கல் ஆட்டுக்கல், அடுமனை அஞ்சறைப்பெட்டி ஓவியங்கள்,மற்றும்
பழங்கால புகைப்படங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வியப்புடன் கண்டு ரசித்தனர். பின்பு அரண்மனை வாயில் முன்பு இருந்து அனைவரும் குழு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.