• Sun. Mar 16th, 2025

விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு

ByTBR .

Mar 16, 2024

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து விடியா திமுக முதலமைச்சர் கேள்வி எழுப்பாதது ஏன்? சிவகாசியில் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு..,

விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக அமைப்பு செயலரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது.., விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் தேர்தல் தேதி அறிவிப்பு முன்னரே நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மாவட்ட மகளிரணி , நகரம் மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய பேரூராட்சி , மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தேர்தல் வேலைகளை செய்ய தயாராக இருக்கிறோம். மாவட்ட கழக நிர்வாகிகள் இளைஞர் நாங்கள் எல்லாம் ரோட்டில் இருந்து தான் ஓட்டு கேட்க முடியும் . ஆனால் பெண்களாகிய நீங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும், சமையலறை சென்று புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை பெண்களுக்கு எடுத்துச் சொல்லி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க முடியும். அந்த மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு தான் உண்டு. கூட்டத்திற்கு வந்திருக்கும் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் பொறுப்பில் இருப்பவர்கள் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நான் உங்களிடம் சொல்வேன்.

அதை கவனத்தில் கொண்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் எடப்பாடியார் கை காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்து விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எஃகுகோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீதமாக இருந்ததை 50% மாற்றி பெண்களில் அரசியலில் அதிகாரப்பூர்வமான சக்தியாக கொண்டு வந்தவர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சொல்லை ஒளித்து பெண்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர் புரட்சித்தலைவி அம்மா, 2011 இல் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி ராஜலட்கமி காலனி இல்லாமல் வந்த எனக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவையில் இடம் கொடுத்து அழகு பார்த்ததாக சட்டசபையில் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பெருமையாக பேசினார். இதைக் கேட்டதும் அம்மாவின் கண்களில் இருந்து ஒரு பிள்ளையின் தேவை என்ன எனபது தாய்க்கு மட்டும் தான் தெரியும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த தனபால் அவர்களை உணவுத்துறை அமைச்சராகி பிறப்பால் அனைவரும் ஒன்று என்று நிரூபித்து காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா.

திருச்சியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழுமலையை பொதுத் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா,. அதேபோல் நீட் தேர்வில் பிரச்சனை இருந்தபோது அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்க 7.5சதவீதத்தை கொண்டு வந்து அதை சட்டமாக இயற்றியவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார். மக்களுக்காக தியாகம் செய்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் இவர்கள் பின்னால் தான் நாம் இருக்கிறோம். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது சொத்து வரி, பஸ் கட்டணம், மின்சார , பால் விலை உயர்வு என எந்த வரியும் உயர்த்தப்படவில்லை ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர் .இதனால் மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். .தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா. தங்கம் அதிகமாக கிடைக்கும் பெல்ஜியம் நாட்டில் கூட இலவசமாக தங்கத்தை கொடுத்தது கிடையாது. ஆனால் தமிழக பெண்களுக்காக புரட்சித்தலைவி அம்மா தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையாக ரூபாய் 50,000 கொடுத்து பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். கர்ப்பமுற்ற பெண்களுக்கு ரூபாய் 18000 ,குழந்தை பெற்றால் அம்மா பெட்டகம் மற்றும் மருத்துவ லேகியம் என அனைத்து திட்டங்களும் புரட்சித்தலைவி அம்மா செய்தார்கள். அதையே அம்மாவின் பின் ஆட்சிக்கு வந்த புரட்சித்தமிழர் எடப்பாடியாரும் அந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி காட்டினார், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு, , காலனி சட்டை, மேம்பாலங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் என்று மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அதனால் இன்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் மனதில்பேசப்பட்டு வருகிறார். முதியோர் உதவித்தொகை ரூபாய் 1000 ல்இருந்து 1500 ஆக உயர்த்தி கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா.புரட்சித்தலைவி அம்மா மாணவ, மாணவிகளின் அறிவிப்பு திறனை ஊக்கப்படுத்த மடிக்கணினி கொடுத்தார். தற்பொழுது திமுக அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பதையும் நிறுத்திவிட்டன..எடப்பாடியார் ஆட்சியில் ஆவது கடைசி நேரத்தில்கூட நமது மாவட்டத்தில் 5000 பேருக்கு தாலிக்கு தங்கமும், ரூபாய் 50,000 கொடுக்கப்பட்டது..அதேபோல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனத்திற்கு ரூ 25000 மானியமாக கொடுக்கப்பட்டது. தற்பொழுது அந்தத் திட்டமும் நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா காலத்தில், ரயில் பேருந்து பயணம் இல்லாமல் மக்கள் வெளியே கூட செல்ல முடியாத சூழ்நிலையில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச அரிசியை கொடுத்தவர் எடப்பாடியார். அதேபோல் கஜா புயல் சென்னை பெருவெள்ளம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்த போது உடனடியாக அங்கு களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, இருப்பிடம், ஆகியவற்றை உடனடியாக செய்து கொடுத்தவர் எடப்பாடியார்.எடப்பாடியார் களத்திற்கு வந்தவுடன் தான் திமுக அமைச்சர்கள் முதலமைச்சர் அனைவரும் களத்தில் இறங்கினர். மக்களின் கஷ்டங்களை புரிந்து அவர்களுக்கு உதவிகள் செய்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவிற்கு பிறகு மூன்றாம் அத்தியமாக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார். இதை மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக போய் சொல்ல வேண்டும் .தற்பொழுது நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 2026 இல் எடப்பாடியாரை முதலமைச்சர் ஆகும். ஒரு முன்னோட்டமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தொகுதியில் 40 தொகுதி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். கர்நாடக அமைச்சர் சிவகுமார் தமிழ்நாட்டிற்கு தண்ணி தர முடியாது என்று திமிராக பேசி வருகிறார். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியுடன் இருப்பதால் விடியா திமுக முதலமைச்சர் அதை எதிர்த்து கூட பேச பயப்படுகிறார். காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சென்று வாதாடி, போராடி நமக்கு தண்ணீரை பெற்றுக் கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா. ஆனால் தற்பொழுது நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு எம்பிகள் 38 பேரும் டில்லிக்கு சென்று சிற்றுண்டியில் பக்கோடா, காப்பி சாப்பிடும் வேலையை மட்டும் தான் செய்து வருகிறார்கள். காவிரி பிரச்சனைக்காக எந்த போராட்டத்தையும் திமுக நடத்தவில்லை. ஆனால் காவேரி பிரச்சனைக்காக நமது எம்பிக்கள் 29 நாட்களாக போராடி பாராளுமன்றத்தை முடக்கினர். காவிரியில் இருந்து தண்ணீர் தராத கர்நாடகாவை திமுக அரசு ஏன் எதிர்க்கவில்லை இதை நாம் மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும் எங்கள் உழைப்பை விட பெண்களாகிய உங்களுக்கு பவர் அதிகம்.மகளிராகிய உங்களின் உழைப்பால் தான் கட்சிக்கு பெரும்பான்மை வெற்றி வந்து சேரும். பஏழைப் பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு செய்யும் திட்டங்களை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா.பெண்களுக்கு பார்த்து பார்த்து செய்தவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மா கொண்டு வந்த அம்மா உணவகம், , திருமணத் உதவித்தொகை தாலிக்கு தங்கம் திட்டம் என அனைத்து திட்டங்களையும் நிறுத்திய திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்று நீங்கள் பெண்களிடம் போய் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் இன்று முதல் அனைத்து மகளிர் அணி நிர்வாகிகளும் அதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் இவ்வாறு பேசினார.

ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி, நகர, ஒன்றிய, பேரூராட்சி மகளிரணி நிர்வாகிகள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சேலைகள் வழங்கினார்.கழக மகளிர் அணி துணைச் செயலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சந்திர பிரபாமுத்தையா,மாவட்டக் கழகத் துணைச் செயலாளரும்,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான வசந்தி மான்ராஜ் ,மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர். சுபாஷினி ,மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் அழகுராணி,மேற்கு மாவட்டமகளிர் அணி இணை செயலாளாகள் சகுந்தலா, சுமதி மணிகண்டன் ,மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் கலைவாணி, வசந்தி மணி ,சிவலட்சுமி, சிவகாசி கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுடவள்ளி, மேற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஆனந்தலட்சுமி, தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சசிமலர், சிவகாசி கிழக்கு பகுதி மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மேற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் பிரியா, மேற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் முருகேஸ்வரி ,மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் சுபா, துணை செயலாளர்கள் கவிதா, முருக பூபதி, N ராஜபாளையம் தெற்கு நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வடக்கு நகர மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா தேவி, ராஜபாளையம் மேற்கு ஒன்றியமகளிர் அணி செயலாளர் சந்தனமாரி, தெற்கு ஒன்றிய மாநில செயலாளர் துரைச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தலீலா, விருதுநகர்நகர மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி விருதுநகர் கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அன்னபூரணம், மேற்கு ஒன்றியமகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி ,வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராஜாத்தி, வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராஜாத்தி, விருதுநகர்சேத்தூர் பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, செட்டியார்பட்டி பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் சுமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மகளிர் அணி துணை செயலாளர்கள் கவிதா, , ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு ஒன்றியமகளிர் அணி செயலாளர்ஜெய கிறிஸ்டி, வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பொன்னி, வத்திராயிருப்பு மேற்கு ஒன்றிய மகளிதனீர் செயலாளர் பொன்னியம்மாள், தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராணி ,வடக்கு ஒன்றிய மகளிரணி செயலர் தனலட்சுமி, வத்திராயிருப்பு பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் ரெங்கம்மாள், சுந்தரபாண்டியம் பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் கல்யாணி, எஸ் கொடிக்குளம் பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் ராமுத்தாய் ,புதுப்பட்டி பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் பூரணம் , மம்சாபுரம் பேரூராட்சி மகளிர் அணி செயலாளர் மகாதேவிதிருத்தங்கள் கிழக்கு மேற்கு தொகுதி செயலர்கள்எம்.பி கிருஷ்ணமூர்த்தி, ,வி சரவணகுமார், தொகுதி வி கருப்புசாமி பாண்டியன்,தொகுதி . .எம் சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் வீஆரோக்கியராஜ், .,வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. லட்சுமி நாராயணன், தெற்குஒன்றிய செயலாளர் ஜி பாலாஜி. ,,மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர். பாண்டியராஜன் தலைவர் , எம்.கே.என் செல்வம்மேற்கு மாவட்ட அம்மா துணை பேரவை துணைச் செயலாளர்களானஎம் எஸ் செல்வகுமரன், எஸ் கார்த்திக், ,தொகுதி வீ கணேசன்,,எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்கள்.சிவராஜ் துணைச் செயலாளர், மேற்கு மாவட்டஇளைஞர் பாசறைதுணைச்செயலாளர் அழகர் குமார், பைபாஸ் தங்கப்பாண்டி,மாண ரணி, இணைச் செயலாளர் முத்துராஜ்,மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை த் தலைவர் மாயாண்டி, , எம் ஜி ஆர்இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.டி சங்கர்,உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை.மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருமான ஆர். சுபாஷினி சிறப்பாக செய்திருந்தார்.