தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி கிளை சார்பில், பருவகால மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமையன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீரை வழங்கி, தானும் அருந்தினார். மேலும், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், சமூக நல செயல்பாடுகளை பாராட்டினார்.
கடந்த மூன்று தினங்களாக பேராவூரணி நகரில் கடைவீதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம், தீயணைப்பு நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னார்வலர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வாக, நிலவேம்பு மூலிகை குடிநீரை வழங்கியதோடு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பேப்பர் கப்புகளையும் உடனடியாக அகற்றி வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கிளைத் தலைவர் ஒய்.முகமது கனி, கிளைச் செயலாளர் பி.எம்.பஷீர் அலி, கிளைப் பொருளாளர் என்.இஸ்மாயில், துணைத் தலைவர் யு.அப்துல்அஜீஸ், துணைச் செயலாளர் எம்.ஏ.கே.அப்துல்லா, வர்த்தக அணி எம்.ஏ.முகமது இஸ்மாயில், தொண்டர் அணி ஏ.சேக் அப்துல்லாஹ், மருத்துவ அணி டி.வசீம் முகமது மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)