• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம்.., முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விசுவநாதன் பங்கேற்று சிறப்புரை…

ByKalamegam Viswanathan

Oct 3, 2024

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மகாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், நத்தம் இரா.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் பெரிய புள்ளான் எம். எல். ஏ.முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.வி கருப்பையா மாணிக்கம், தமிழரசன், தவசி, எஸ். எஸ். சரவணன், மகேந்திரன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஜான்மகேந்திரன், ராஜேஷ் கண்ணா, புளியங்குளம் ராமகிருஷ்ணன், தேனி வி.டி நாராயணசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள் சி முருகன், வக்கீல் தமிழ் செல்வன், வக்கீல் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் மாவட்ட அணி நிர்வாகிகள் லட்சுமி மகேந்திரபாண்டி, சிவசக்தி, பேரு கழகச் செயலாளர்கள் அழகுராஜா, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசுகையில்..,

வாரிசு அரசியலை எளிதாக கடந்து போய் விட முடியாது, தனி மெஜாரிட்டியாக திமுக உள்ளதால் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது, ஜனநாயகத்தின் கரும்புள்ளியாக தான் திமுக செய்துள்ளது,

வடிவேலு திரைப்படத்தில் சொல்வது போல கிணற்றைக் காணோம் என்று கூறுவார். ஆனால் இன்றைக்கு அலங்காநல்லூர் பகுதியில் மலையைக் காணோம், கனிம வளங்கள் எங்கே போகிறது. ஆளுங்கட்சி மக்கள் சேவையாற்ற கவனம் செலுத்தவில்லை. அவர்களுக்கெல்லாம் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்று நிலை உள்ளது. இந்த பிரச்சனை தீர வேண்டும் என்றால் 2026 இல் எடப்பாடியார் முதலமைச்சர் வரவேண்டும் என பேசினார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில்

அதிமுக தோல்வி என்பது நிரந்தரமல்ல, தற்காலிகம் தான். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்பது வேறுபாடு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை முன்வைத்து நடத்தப்பட்டது திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று பாமர மக்கள் எண்ணி வருகிறார்கள், சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியாரா? ஸ்டாலினா? என்பது தான் வரும் நிச்சயம் எடப்பாடியார் அதில் வெற்றி பெறுவார் என கூறினார்.
கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி இணைச்செயலாளர் ஆர் பி ஆர் பி உதயகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் மணியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் முடுவார்பட்டி முத்துக்கிருஷ்ணன், பண்ணைகுடி கிளைச் செயலாளர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மகாராஜன், அலங்காநல்லூர் ஒன்றிய விவசாய அணி செயலாளர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அழகுமலை, முடுவார் பட்டி கிளைச் செயலாளர் எஸ் முத்து, பிரதிநிதி மக்கள் மூர்த்தி, விவசாய அணி ஒன்றிய தலைவர் காமாட்சி, கோடங்கிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கப்பாண்டி, புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், பெரிய இழந்த குளம் கிளைச் செயலாளர் செந்தில் மற்றும் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் வார்டு பிரதிநிதிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.