பாமக சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தொகுதி செயலாளர் தலைவர் மற்றும் தொகுதி மகளிர் அணி தலைவர் செயலாளர் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பாமக சார்பில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் தொகுதி செயலாளர் தலைவர் மற்றும் தொகுதி மகளிர் அணி தலைவர் செயலாளர் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன்,முன்னாள் மாவட்ட செயலாளர்கள் .உலக சாமிதுரை, ராஜேந்திரன்.அரியலூர் பெரம்பலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை,அமைப்பு தலைவர் மருதவேல் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம்,வன்னியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் அய்யாசாமி, சேலம் மேற்கு வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு குன்னம் சட்டமன்ற தொகுதியில் தொகுதி செயலாளர் தலைவர் மற்றும்தொகுதி மகளிர் அணி தலைவர் செயலாளர்.தேர்வு செய்வதற்கான விருப்ப மனுக்களை பெற்றனர். கூட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சார்ந்த மாவட்ட மாநில ஒன்றிய என அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி நன்றி கூறினார்.
சேலம் மேற்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில்..,
தமிழகத்தில் நமது கட்சி ஆரம்பித்து 36 ஆண்டு காலம் ஆகி விட்டது ஐந்து வருஷத்துல கட்சி ஆரம்பித்த அதிமுக ஆட்சியைப் பிடித்தனர். கட்சி ஆரம்பித்த 17 வருஷத்தில் திமுக ஆட்சியைப் பிடித்து நமது கட்சியை ஆலோசனை கொள்கையினை கடைப்பிடித்த மாயாவதி நான்கு முறை ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் நாம் இதுவரை அந்த இடத்தை பெறவில்லை. அந்த இடத்தை பெறுவதற்கான சரியான இடம்தான் வருகின்ற 2026 -ம் ஆண்டு தேர்தல் என்றும் நாம் சரியான பொறுப்பாளரை தேர்வு செய்து ஐயா, நினைக்கிற இடத்தை நிறைவு செய்ய வேண்டும் தொகுதி தலைவர் செயலாளர்களும் மகளிர் தலைவர் செயலாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் வாக்கு அதிகமாக உள்ளது. அதனால் மகளிர்களை நாம் அதிகமாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வருகின்ற தேர்தலில் 2026 ஆண்டு தேர்தலில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று கூறினார்.