கன்னியாகுமரி மாவட்டம் – தக்கலை அடுத்த, குமாரகோவில் விலக்கு உடுப்பி ஹோட்டல் அருகே தனியார் ஆம்னி பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி தள்ளி, அருகில் உள்ள வள்ளியாற்றில் கவிழ்ந்தது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் (DFO) சத்யக்குமார் உத்தரவின் பெயரில்,
தக்கலை நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தான பேருந்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

சம்பவம் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்கள். குமரி ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின்.
மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.



