• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எண்ணெய்காப்பு திருவிழா..,

ByKalamegam Viswanathan

Jan 9, 2026

திருப்பரங்குன்றம் நகர் வீதிகளில் தெய்வானை அம்பாள் வலம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழாவையொட்டி தெய்வானை அம்பாள் மட்டும்நகர் உலா வ வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் எண்ணெய் காப்பு உற்சவ விழா 4 நாட்கள் வெகு விமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டிற்கான எண்ணெய்காப்பு உற்சவ விழா கடந்த (4 -ந் தேதி) காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழா தொடர்ந்து நேற்று 8 – ந தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது..
திருவிழாவையொட்டி கடந்த 4 நாட்களும் கோவிலுக்குள் உள்ளதிருவாட்சி மண்டபத்தில்அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தஊஞ்சலில் அமர்ந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அங்கு தெய்வானைஅம்பாளின் சிரசில் (தலையில்) மூலிகை எண்ணெய் தேய்த்தல், வெள்ளியிலான ‘ சீப்’ கொண்டு தலைவாருதல்,, வெள்ளி குச்சி மூலம்
பல்துலக்குதல் , கண்ணாடியால் முகம் பார்த்தல், வெத்திலை, பாக்கு போடுதல், வாய் கொப்பளித்தல் என்று பல்வேறு அன்றாட நிகழ்வுகள் நடந்தது .

இதனையடுத்து அம்பாளுக்கு கிரிடம் சூட்டப்பட்டு மகா தீப , தூப, ஆராதனை நடந்தது.
பக்தர்களுக்கு “மூலிகை எண்ணெய் ” பிரசாதமாகவழங்கப்பட்டது தெய்வானை அம்பாள் மட்டும் நகர் உலா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று
8-ந் தேதி மாலை 6.30மணியளவில பல்லக்கில்் தெய்வானை அம்பாள் எழுந்தருளி நகரின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..அங்கு ஏராளமான பக்தர்கள் தெய்வானைஅம்பாளை தரிசனம் செய்தனர்.

இந்த கோவிலைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் ஐப்பசி பூரம்திருவிழாவிலிலும்,மார்கழி மாதம் நடைபெறும் எண்ணெய் காப்பு திருவிழாவிலுமாகதெய்வானை அம்பாள் மட்டுமே எழுந்தருளி நகர் உலாவருவார்.
ஆக ஒரு ஆண்டிற்கு 2 முறை தெய்வானை அம்பாள் மட்டும் தனியாக நகர் உலாவ வருவதுஎன்பது குறிப்பிடத்தக்கது.