• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் கேமராக்களை பறித்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்!

ByA.Tamilselvan

Nov 15, 2022

திருப்பதி கோயிலுக்குள் அனுமதியின்றி, புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்களின் கேமராக்கள் உண்டியலில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் சிலர் கோயில், வடிவமைப்புகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அதற்காக அவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே வரும் பக்தர்களை புகைப்படங்கள் எடுக்கவும், திருப்பதி கோயிலுக்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் தனியே புகைப்பட கலைஞர்கள் உள்ளனர். அதற்கு அவர்களுக்கு தனியே லைசன்ஸும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் லைசன்ஸ் இல்லாமல் சில புகைப்பட கலைஞர்கள் கோயிலுக்குள் இருப்பதாகவும், அவர்கள் பக்தர்களை தொந்தரவு செய்வதாகவும் அந்த கோயிலின் தேவஸ்தான அதிகரிகளிடம் புகார் வந்தது.
இதையடுத்து சோதனை செய்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் இருப்பதை கண்டறிந்து அவர்களின் கேமராக்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கேமராக்களை அவர்கள் கோயில் உண்டியில் செலுத்தினர். உண்டியலில் செலுத்தப்பட்ட கேமராக்கள் அனைத்தும் தேவஸ்தானம் சார்பில் விரைவில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும். அவ்வாறு செய்யப்படும்போது கிடைக்கும் தொகை தேவஸ்தான கணக்கில் செலுத்தப்படும். இனியும் இது போன்று அனுமதியின்றி புகைப்படங்கள் எடுக்கப்பட்டால், அவர்கள் கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.