மஹாளய அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும் ஆனால் மஹாளய அமாவாசை தினத்தன்று தாய் வழி முன்னோர்கள், தந்தை வழி முன்னோர்கள், மற்றும் பங்காளிகள் ஆகியோருக்கும் தர்ப்பணம் கொடுப்பது மகாளய அமாவாசையின் சிறப்பு அம்சமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை,தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்து இறந்து போன தங்களது முன்னோர் நினைவாக புனித நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம் இந்த நிலையில் கரூர் மாவட்டம் காவேரி ஆற்றங்கரையை ஒட்டிய தளவா பாளையம், நெரூர், மாயனூர், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் புனித நீராடிய பின்னர் வாழை இலையில் பழம், வெற்றிலை பாக்கு, எள்ளு, அரிசி ஆகியவற்றை கொண்டு ஏராளமானோர் வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.