திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடமாநில இளைஞர்கள் தலைக்கேறிய போதையால், பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், திருப்பூரில் பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்நிலையில் தான், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சில வடமாநில இளைஞர்கள் கடைக்குள் புகுந்து மக்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் பேருந்து நிறுத்தம் அருகே சிக்கன் கடை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு வந்த வடமாநில கும்பல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கையில் கட்டையுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. அவர்களை பார்த்ததும், மக்கள் பதறியடித்து ஓடும் காட்சிகளும் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளது. இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த 5 இளைஞர்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் பொதுமக்களைத் தாக்கிய வடமாநில இளைஞர்களின்
