• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு

ByA.Tamilselvan

Jan 29, 2023

ஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார். காரில் இருந்து இறங்கிய அவர் மீது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் மந்திரி நபா கிஷோர் தாஸ் மீது குண்டுகள் பாய்ந்தன. அவரது மார்பை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.