மதுரையில் தேசிய இரத்ததான தினவிழா அரசு இராசாசி மருத்துவமனை இரத்த மையத்தில் நடைபெற்றது. இரத்த பரிமாற்றம் துறை தலைவர் டாக்டர்.சிந்தா தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் டான்சாக்ஸ் மாவட்ட மேற்பார்வையாளர் ஜெய பாண்டி இதயநோய் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் செல்வராணி , புற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் இரத்த மைய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், இரத்த கொடையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மதுரை மாவட்ட தலைமை மருத்துவமனை உசிலம்பட்டியில் டாக்டர் பாரதி தலைமையில் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் நாகராஜன் தன்னார்வ இரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிவித்தார்.
