மியான்மாரில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்ககோரி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது தாய்லாந்துக்கு வேலைக்காக சென்ற 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சட்ட விரோத வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருப்பதை உங்களது கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் பிணை கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதை உறுதி செய்வது அவசியம் ஆகும். எனவே நீங்கள் தயவு செய்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு மியான்மரில் சிக்கியவர்களை பாதுகாப்புடன் இந்தியா திரும்புவதற்கு ஏற்பாடு செய்தால் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
