பெரம்பலூர் அருகே குரும்பலூர் பகுதியில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ மற்றும் மணிநேர விரிவுரையாளர்கள்,அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 43 பேருக்கு கடந்த 8 மாத காலமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்,10 பாட பிரிவுகளுக்கு முறையாக அரசாணை வழங்கப்படாததை கண்டித்தும், கல்லூரி வளாகத்தில் கடந்த 22 ஆம் தேதி முதல் 15 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் 15 நாளான இன்று ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை கண்டித்தும் கல்லூரி வளாகத்தின் முன்பாக உருவபொம்மையால் ஆன பிணத்திற்கு தமிழக அரசு என பெயரிட்டு அதனிடம் கோரிக்கை மனு அளித்து ஒப்பாரிகள் வைத்தும் கோரிக்கைகளை கண்டன முழக்கங்களாக எழுப்பியும் ஆசிரியர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.