• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டசிலும் வாய்ஸ் நோட் பதிவு… புதிய அப்டேட்…

Byகாயத்ரி

Sep 23, 2022

வாட்ஸ்அப் அதிகமானோர் பயன்படுத்தும் செயலி. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமின்றி KaiOS அம்சம் உடைய சாதனங்களிலும் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. புது அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது உலகில் அதிகமக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் இருக்கிறது. பல கோடிக் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் அனைத்தும் அதன் பயனாளர்கள் தங்களது கணக்குகளில் இருந்து தற்காலிக புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஸ்டேட்டஸ் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் வரை நீடிக்கும். கடந்த 2017ம் வருடம் தன் ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், இப்போது அவற்றில் ஒரு புது வசதியை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஸ்டேட்டசில் இனி பயனர்கள் வாய்ஸ் நோட்ஸ்-ஐ வைக்கமுடியும்.இந்த அம்சத்தில் பயனர்கள் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று அவர்களின் குரல் குறிப்புகளைப் பதிவுசெய்ய மையத்திலுள்ள மைக் ஐகானைக் கிளிக் செய்தால் போதும்.

பயனர்கள் தங்களது தனி உரிமை அமைப்புகளின் அடிப்படையில் அவர்களின் தொடர்புகளுக்கு குறுகிய குரல் செய்திகளைப் பகிரமுடியும். அத்துடன் பயனர்கள் தங்களது குரலைச் சேர்ப்பது மட்டுமின்றி, அவர்கள் பின்னணி நிறத்தையும் மாற்றியமைக்க முடியும். குரல் குறிப்பு 30 வினாடிகள் வரை இருக்கும். அதுமட்டுமல்லாமல் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.