• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை – உடலை கைப்பற்றி காவல் துறை விசாரணை!!!

BySeenu

Mar 21, 2025

கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆலமரத்தில் அடையாளம் தெரியாத வட மாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவ்வழியாக சென்ற மக்கள் ஆலமரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போத்தனூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபரின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்ததாகவும் கூறிய காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.