• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் மீண்டும் நோரா வைரஸ்

Byகாயத்ரி

Nov 30, 2021

கேரளாவில் கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு மீண்டும் நோரோ வைரஸ் பரவியுள்ளது மக்களை கடும் பீதியடைய செய்துள்ளது.

கேரளாவில் ஜிகல்லா நோரோ ஜிகா நிபா கொரோனா என அடுத்தடுத்து வைரஸ்கள் பரவி வருகின்றன. இந்தியாவிலேயே தற்ேபாது கேரளாவில் தான் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் உள்ளது.

தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் நோரோ என்ற வைரஸ் நோய் கேரளாவில் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. அசுத்தமான குடிநீர் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது.

ஏற்கனவே இந்த வைரசால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக இந்த வைரஸ் கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் தற்போது நோரோ வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.திருச்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுக்கு இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.