பஹ்ரைனில் நடந்த மனோமா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ரஷ்ய வீரர் எவ்கெனி கார்லோவிஸ்கியுடன் நேற்று மோதிய ராம்குமார் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
2வது செட்டில் கார்லோவ்ஸ்கி கடும் நெருக்கடி கொடுத்தாலும் அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ராம்குமார் 6-1 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.இப்போட்டி 1 மணி 1 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஏடிபி சேலஞ்சர் தொடர்களில் 7 முறை பைனலுக்கு முன்னேறி உள்ள ராம்குமார் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.