விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை பஸ் நிலைய முன்பாக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மாவட்ட கழகச் செயலாளர். மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பயில்வான் கே.எஸ். சந்தோஷ் குமார் தலைமையில் பஸ் நிலையம் முன்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.


பின்னர் சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி ஆதரவற்ற பள்ளி குழந்தைகள் காப்பகத்தில் வைத்து மதிய அசைவ உணவு வழங்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ண கண்ணன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தாமரைக்கண்ணன் ஊராட்சி செயலாளர் கோவிந்தன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் கலந்துள்ளனர்.






