• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு போன் ரீசார்ஜ் இல்லை…

Byகாயத்ரி

Jun 8, 2022

செல்போன் பயன்பாட்டால் பல்வேறு குற்றச் செயல்களும் விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், மாணவர்களிடையே செல்போன் மோகம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது. மேலும் பில் இல்லாமல் கொண்டுவரப்படும் செல்போன்களை வாங்க மாட்டோம் எனவும், மாவட்டம் முழுவதும் ஒரே பொருள், ஒரே விலை திட்டத்தில் அனைத்து கடைகளில் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழகம் முழுவதும் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.